ஃபானி புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் மோடி இன்று ஒடிசா செல்கிறார்

May 06, 2019 06:48 AM 154

ஃபானி புயல் காரணமாக உருக்குலைந்த ஒடிசா மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயல் கரையை கடந்த போது வீசிய சூறைக்காற்றால் 14 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ளது. மேலும், புயலால் உயிரிந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

புயல் பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடுத்த 15 நாட்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக, முதலமைச்சர் நவீன் பட்நாயக் உறுதியளித்துள்ளார்.

இந்தநிலையில் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் மோடி இன்று ஒடிசா செல்கிறார். சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்நிலையில் அங்கு சென்று நேரடியாக புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி பார்வையிட்டு, ஆய்வு செய்கிறார்.

Comment

Successfully posted