டி.எஸ்.பி. முதல் காவலர்வரை ஒரே இடத்தில் யோகா!

Oct 10, 2020 09:00 PM 1038

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவில்பட்டியில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா பயிற்சி வழங்கப்பட்டது. டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில், டி.எஸ்.பி. கலைக்கதிரவன், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில், மூச்சு பயிற்சி, சூர்ய நாமஸ்காரம் முதல் பல்வேறு யோகாசன பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் டி.எஸ்.பி. ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

காவலர்களின் தொடர் பணி, வேலை பளு காரணமாக காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும், அனைவரும் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த யோகா
நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர் குணா காவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

Comment

Successfully posted