நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

Apr 30, 2019 07:59 AM 351

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி, டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ராசிபுரத்தில் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா, குழந்தைகளை விற்பனை செய்தது, அவருடைய ஆடியோ பதிவின் மூலம் அம்பலமானது. இந்த விவகாரம் தொடர்பாக, குழந்தைகளை விற்க உதவியதாக, கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், இதுவரை 12 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமுதா உட்பட, 20 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Comment

Successfully posted