கருணாநிதியின் நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மலர்தூவி அஞ்சலி

Aug 20, 2018 10:59 AM 666

மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஜூலை மாதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா சென்றார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 7ஆம் தேதி காலமானார். அப்போது கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாத விஜயகாந்த், கண்ணீர் மல்க வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து இன்று காலை விஜயகாந்த் சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் இருந்து நேரடியாக மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற விஜயகாந்த், நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

Comment

Successfully posted