மக்களவைத் தேர்தலில் போட்டி: தே.மு.தி.க.வினருக்கு வரும் 13-ம் தேதி நேர்காணல்

Mar 11, 2019 12:09 PM 260

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தேமுதிகவினருக்கான நேர்காணல், வரும் 13 ஆம் தேதி தொடங்கும் என தேமுதிக அறிவித்துள்ளது.

தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 13-ம் தேதி காலை 10 மணி முதல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில், ஒரே நாளில் நேர்காணல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்ப மனு அளித்துள்ளவர்கள், 13ம் தேதி நேரில் வருமாறும், உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், தனித் தொகுதி சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகலையும் எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted