வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜயகாந்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Apr 15, 2019 08:08 PM 151

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்னை வில்லிவாக்கம் பகுதியில் பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்துக்கு பொதுமக்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கைகூப்பியவாறு பாமக வேட்பாளருக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

இதனை தொடர்ந்து, மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர், திருவிக. நகர், பெரம்பூர் பகுதிகளில், தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்டாலினுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Comment

Successfully posted