காவல்துறை உதவி ஆய்வாளர் மீது திமுக நிர்வாகி தாக்குதல்

Dec 10, 2018 12:50 PM 251

சென்னை வாலாஜா சாலையில் போக்குவரத்து உதவி ஆய்வாளரை, குடிபோதையில் திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வாலாஜா சாலையில் அபிராமபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக கலைஞர் தொலைக்காட்சி ஸ்டிக்கர் ஒட்டிய வாகனம் உள்ளிட்ட 3 வாகனங்களில் 3 பேர் வந்துள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர்கள், உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை தாக்கினர். இதனையடுத்து காவல் கட்டுப்பாடு அறைக்கு அவர், தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி போலீசார், மூவரையும் கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் அயோத்யா குப்பத்தைச் சேர்ந்த சசிகுமார், ஏழுமலை, நசித் என்பது தெரியவந்துள்ளது. இதில் சசிகுமார் சென்னை மேற்கு மாவட்ட திமுக மீனவர் அணி அமைப்பாளராக உள்ளார். திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவி வகித்தவர்.

 

Comment

Successfully posted