2-வது இடத்தை பிடிக்க திமுக - பாஜக இடையே போட்டி - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி

Aug 13, 2020 03:58 PM 1493

இரண்டாவது இடத்திற்காகதான், திமுக - பாஜக இடையே போட்டி என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கலிங்கப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் வழங்கும் பணியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2011 தேர்தலில் அதிமுக அணியில் இணைந்து தேமுதிக எதிர்கட்சியானதை போல், பாஜகவிற்கும் எதிர்க்கட்சியாக ஆசை வந்திருப்பதாக கூறினார். அதை வி.பி.துரைசாமி மறைமுகமாகத் தெரிவித்திருக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார். இரண்டாவது இடத்தை பிடிக்கவே திமுக-பாஜக இடையே போட்டி நிலவுவதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Comment

Successfully posted