திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என வேட்பாளரின் தாயாரே வேண்டுகோள்!

Apr 03, 2021 09:05 AM 597

தென்காசியில் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என வேட்பாளரின் தாயாரே வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பாக பூங்கோதை போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், தமது மகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என பூங்கோதையின் தாயாரான கமலா பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமது கணவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பூங்கோதை நடந்து கொண்டுள்ளதாக அவரது தாயாரே குற்றம்சாட்டியுள்ளார்.

தென்காசி திமுக வேட்பாளர் பூங்கோதை மீது பல குற்றசாட்டுகளை அவரது தாய் முன்வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Comment

Successfully posted