திமுகவில் இருந்து எம்எல்ஏ கு.க.செல்வம் தற்காலிகமாக நீக்கம்

Aug 05, 2020 08:22 PM 1064

திமுகவில் இருந்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரான கு.க.செல்வம், தமிழக பாஜக தலைவர் முருகனுடன் அண்மையில் டெல்லி சென்ற நிலையில், அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். இந்நிலையில் கு.க.செல்வத்தை திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்து, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என, கு.க.செல்வத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted