தற்கொலை முயற்சி வரை தள்ளிய உள்கட்சி பூசல் - ஐசியூவில் திமுக எம்எல்ஏ

Nov 19, 2020 08:00 PM 484

உட்கட்சி பூசலால் தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான பூங்கோதை ஆலடி அருணா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மற்றும் தென்காசியில் நடைபெற்ற தி.மு.க. கூட்டங்களில் அக்கட்சியின் எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா தரக்குறைவாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், சொந்த ஊர் திரும்பிய நிலையில், நேற்றிரவு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக தெரிகிறது.

காலையில் சுயநினைவை இழந்த நிலையில் கிடந்த பூங்கோதை ஆலடி அருணா, நெல்லையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு, பதவிக்கு பணம் போன்ற செயல்களுக்கு பெயர் போன தி.மு.க.-வில், உட்கட்சி பூசலால் எம்.எல்.ஏவே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களிடைய கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted