திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்

Jun 10, 2019 03:58 PM 1096

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நாளை ஆஜராக உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி, திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறான வார்த்தைகளால் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடர அரசாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு வழக்கறிஞர் மனோகரன், திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது, நாளை நடைபெறும் விசாரணையில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comment

Successfully posted