டோக்கன் மூலம் பணப்பட்டுவாடா

Mar 10, 2021 07:31 AM 7164

ஊழலை விஞ்ஞானம் பூர்வமாக செய்து வரும் திமுக, தற்போது வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து பண விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...

ஊழல், நில அபகரிப்பு, தமிழ் இன துரோகம் இப்படி அடுக்கு அடுக்காய் குற்றச்சாட்டுகளை குத்தகைக்கு எடுத்த கட்சி என்றால் அது திமுக தான்... கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிக் கட்டிலில் அமராத அதிருப்தியில், இந்த முறை எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டுமென்பதற்காக பல்வேறு குறுக்கு வழிகளை தேடி வருகிறது திமுக. அதற்காக, பிரசாந்த் கிஷோரை விலை கொடுத்து கூட்டி வந்துள்ள திமுக, பல்வேறு தில்லு முல்லு வேலைகளை திமுக அரங்கேற்றி வருகிறது.

ஊர் ஊராக சென்று, கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் நாடகமாடும் ஸ்டாலின், 100 நாட்களில் குறை தீர்ப்பேன் என்று தமிழக மக்களின் கண்களில் மண்ணை தூவ திட்டமிட்டு வருகிறார். மனுக்களை வாங்கிக் கொண்டு, பெட்டியில் போடும் திமுக, பொதுமக்களின் கையில் ஒரு அட்டை விநியோகித்து வருகிறது. அட்டையில், குறிப்பிடப்பட்டுள்ள எண்களை டோக்கனாக கொண்டு, உள்ளூர் கட்சி நிர்வாகிகளை வைத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளது திமுக.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் கையாண்ட 20 ரூபாய் டோக்கன் பாணியை, சற்று அப்டேட் செய்து குறை தீர்க்கும் கூட்டம் பெயரில் புது வித்தையை கையெடுத்துள்ளார் ஸ்டாலின்.

வாக்காளர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ள திமுக, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்ற பழமொழிக்கு ஏற்ப, விஞ்ஞான ஊழல் உத்திகளை தொடர்ந்து தன்னகத்தே கொண்டுள்ளது.

உங்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதே தமது முதல் பணி எனக் கூறி வரும் ஸ்டாலினுக்கு, திமுக தான், தமிழக மக்களுக்கு முதல் பிரச்னை என்பது தெரிந்தும் தெரியாத போல் நடித்து வருகிறார். எது எப்படி இருந்தாலும், திமுகவில் தில்லு முல்லு வேலைகள், ஆடிக் காற்றில் அம்மி பறப்பது போல், காணாமல் போகும் என்பதே நிதர்சன உண்மை....

Comment

Successfully posted