உண்ணாவிரதம் என்ற பெயரில் பஜ்ஜி சாப்பிடும் தி.மு.க.வினர் - வீடியோ இணையத்தில் வைரல்

Oct 10, 2020 09:53 PM 1298

உண்ணாவிரதம் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி கடைகளில் தி.மு.க.வினர் உணவு உண்ணும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் அருகே வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து ஏராளமான மக்களை ஒன்று கூட்டி, தி.மு.க.வினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது தி.மு.க.வைச் சேர்ந்த பலரும், கட்டுப்பாட்டை மீறி தேநீர் கடைகளில் நின்று டீ, பிஸ்கட், பஜ்ஜி என உணவுகளை சாப்பிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்ணாவிரதம் என்ற பெயரில் தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியும், தி.மு.க.வினரும் கபட நாடகம் ஆடியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted