குடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டம்

Nov 18, 2019 10:35 AM 216

தோப்புக்குள் கூட்டம் போட்டு குடி கும்மாளத்துடன் இளைஞர்களை திமுக சீரழப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் குற்றச்சாட்டை திமுக இளைஞரணி தொண்டர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாஸ்தா கோவில் வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் திமுகவின் இளைஞர் அணி பாசறை பயிற்சிக் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் இளைஞர்கள் குடி கும்மாளத்துடன் வெளியில் சுற்றித் திரிந்தது பொதுமக்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இராஜபாளையத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுகவின் இளைஞர்கள் அணி கூட்டத்தில் நடக்கும் அட்டூழியங்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பட்டியலிட்டார். அதனை உறுதிபடுத்தும் விதமாக திமுகவின் இளைஞர் அணி பாசறை கூட்டம் குடி கும்மாளத்துடன் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted