திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பணம் பட்டுவாடா

Mar 25, 2019 05:17 PM 117

ராசிபுரத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் விதியை மீறி கூட்டத்திற்க்கு வந்தவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு திமுகவினர், தேர்தல் விதியை மீறி ஆட்களை ஆட்டோவில் ஏற்றி கொண்டு வந்தனர். கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் பேசுகையில் அமர்ந்திருந்தவர்கள் திடிரென எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்திற்க்கு வந்தவர்களுக்கு திமுகவினர் பொது இடத்திலேயே வைத்து தேர்தல் விதிகளை மீறி பணம் பட்டுவாடா செய்தனர்.

Comment

Successfully posted