சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கொடுக்க மறுத்த திமுக நிர்வாகி !

Oct 17, 2018 11:32 AM 331

சென்னை ஆர்.கே.நகரில் உள்ள அமுதா உணவகத்தில் திமுக மேற்குப்பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜா சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி 38வது வட்ட முன்னாள் செயலாளர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிற திமுக நிர்வாகிகளையும் கடைக்கு வரவழைத்து கடையின் உரிமையாளர் தங்கப்பாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கடை ஊழியர் முருகனை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த முருகன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவினரின் அராஜக தாக்குதல் குறித்து ஆர்.கே.நகர் காவல்நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

ஆதிக்க திமிரில் பிரியாணி கடை, பியூட்டி பார்லர், பஜ்ஜி கடை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் சாமானியர்களை தாக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுகவினருக்கு சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மூலம் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Comment

Successfully posted