இறந்த பெண்ணின் வீட்டின் முன்பு திமுக கூட்டணியினர் அராஜகம்

Apr 16, 2019 10:55 AM 67

செந்துறை அருகே இறந்த பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்பு பொதுமக்களை தாக்கி திமுக கூட்டணியினர் அராஜகத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட ஆலத்தியூர் கிராமத்திற்கு சிதம்பரம் மக்களவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது பெண் ஒருவர் இறந்ததால் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கிராமத்தினர் அந்த பெண்ணில் வீட்டிற்கு வந்திருந்தனர்.

இதனால் அவரது வீடு இருக்கும் பகுதியின் பாதை அடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து திருமாவளவனிடமும் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் எடுத்து கூறப்பட்டது. ஆனால் திருமாவளவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தடுப்பை மீறி அவ்வழியாக சென்றதோடு, கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் உருவானது.

பொதுமக்களை திமுக கூட்டணியினர் கொடூரமான தாக்கியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியினரின் இந்த அராஜகம் மக்களிடம் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted