திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு தடை

Apr 15, 2019 06:37 PM 71

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு வகையிலும் விளம்பரங்களை செய்து வருகின்றன. இந்நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், பொய் வாக்குறுதிகள் மற்றும் ஆதாரமற்ற புகார்களை மையப்படுத்தி, விளம்பரங்களை எடுத்து ஒளிபரப்பி வருகிறது.

இது குறித்து, அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரை ஏற்ற தேர்தல் ஆணையம், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.

Comment

Successfully posted