கல்வி நிறுவனத்திற்குள் அடியாட்களுடன் நுழைந்து வேலி அமைக்க முயற்சித்த திமுக பிரமுகர்

Aug 31, 2021 06:23 PM 1254

திருப்பூரில் தனியார் கல்லூரி வளாகத்துக்குள் அடியாட்களுடன் புகுந்து திமுக பிரமுகர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில், வகுப்புகள் திறக்கவுள்ள நிலையில், தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை திடீரென கல்வி வளாகத்திற்குள் நுழைந்த திமுக பிரமுகரான செங்கப்பள்ளி சுப்பிரமணியம், பள்ளி ஊழியர்களைத் தாக்கினார்.

கடந்த 2017-ம் தேதி கல்வி நிறுவனம் வாங்கிய கடன் விவகாரத்தில், நிதி நிறுவனத்தின் சார்பில் தலையிட்ட திமுக பிரமுகர், பணியாளர்களைத் தாக்கி, பள்ளியைப் பூட்டி, வளாகத்துக்குள் வேலி அமைக்க முயன்றார்.

இதுதொடர்பாக கல்வி நிறுவன நிர்வாகி அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கடன் வாங்கிய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கல்வி நிறுவனத்துக்குள் நுழைந்து திமுக பிரமுகர் அராஜகம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted