திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தேர்தலில் தகுதி நீக்கம்?

Mar 26, 2021 08:23 AM 3513

வாக்காளர்களுக்கு திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு பரிசுப் பொருட்களை வழங்கி வருவதால், திருச்சூழி தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென சுயேட்சை வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திருச்சூழி தொகுதி சுயேட்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு,கடந்த 19ம் தேதி காரைபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.மேலும், இதுதொடர்பாக புகைப்பட ஆதாரங்களும் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து,தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றும், திருச்சூழி தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென்றும் மனுவில் கோரியுள்ளார். இந்த நிலையில், சுயேட்சை வேட்பாளர் மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted