திமுக வேட்பாளர் ராசாவை வரவேற்க சிறுவர்களை அழைத்து வந்த நிர்வாகிகள்

Apr 16, 2019 07:23 AM 53

நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஆ. ராசாவை வரவேற்க வீட்டில் இருக்கும் சிறுவர்களை அழைத்து வந்து திமுகவினர் கூட்டத்தை கூட்டினர்.

நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ. ராசா அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரை வரவேற்க விடுமுறையில் வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் சிறுவர்களைஅழைத்து வந்து கூட்டத்தை கூட்டும் நிலைக்கு திமுக நிர்வாகிகள் தள்ளப்பட்டனர்.

வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் சிறுவர்களை பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு மற்றும் கொடியை கையில் கொடுத்து திமுகவினர் நிற்க வைத்தனர்.

Comment

Successfully posted