"பொது விநியோக திட்டத்திற்கு மூடு விழாவா..!"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் கேள்வி?

Nov 27, 2021 03:17 PM 1654

அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்கிறதா என அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை ஆதார் எண்ணுடன் வழங்குமாறு, வருமான வரித்துறையை, உணவுத்துறை வாயிலாக திமுக அரசு கேட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தையே தமிழ்நாடு அரசு சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அதிமுக அதனை கடுமையாக எதிர்க்கும் என எச்சரித்துள்ளார்.

முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும், இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டமாக மாற்றும் முயற்சியையும் தடுத்து நிறுத்துவதை உறுதி செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Comment

Successfully posted