சூர்யாதேவியின் பின்னணியில் தி.மு.க. இருப்பதாக நாஞ்சில் விஜயன் புகார்!

Oct 14, 2020 10:06 PM 1042

சூர்யாதேவி தன்னை தாக்கிய விவகாரத்தில் திமுக பின்னணியில் இருப்பதாக சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்

சென்னை வளசரவாக்கத்தில் சூர்யாதேவி என்பவர் தன்னை அடியாட்களை வைத்து தாக்கியது தொடர்பாக, சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், சூர்யாதேவியின் ஆட்கள் காவல்நிலையத்திற்கு வெளியே தன்னை தாக்க முயன்றதாகவும், திமுக ஆதரவுடன் சூர்யாதேவி செயல்படுவதாகவும் நாஞ்சில் விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இ

துதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த நாஞ்சில் விஜயன், அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Comment

Successfully posted