தி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்

Oct 16, 2020 07:04 AM 1429

பா.ஜ.க. ஆளும் 13 மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கொரோனா சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடியே தமிழக அரசை பாராட்டியுள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்றது. அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை வழங்கினார். அந்த கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.-வில் உழைப்பு வீணாகாது என்றும், உழைப்பவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கும் கட்சி அதிமுக என்றும் கூறினார்.

ஆனால் தி.மு.க.-வில் குடும்பத்தினர் மட்டுமே பொறுப்புகளுக்கு வர முடியும், அது ஒரு கம்பெனி என்றும், வட்டிக்கடை என்றும் விமர்சித்தார்.

Comment

Successfully posted