முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு தி.மு.க தான் காரணம்

Mar 27, 2019 06:58 AM 227

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததற்கும், விஜயகாந்த் உடல் நலன் குன்றியதற்கும் தி.மு.க தான்
காரணம் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார்.

அமைச்சர் வளர்மதி, ப.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அதிமுக, பா.ம.க, தேமுதிக, பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்திய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என உறுதிபடத் தெரிவித்தார்.

Comment

Successfully posted