திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் கனவில் மிதப்பவர் -அமைச்சர் ஜெயகுமார்

Oct 19, 2018 08:43 AM 665

2019 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் வருவதை திமுக தொண்டர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் கனவில் மிதப்பதாகவும், அவர் கூறியது போல் 2019 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், அவரது தொண்டர்களை திருப்திபடுத்துவதற்காகவே அவர் இவ்வாறு பேசி வருவதாகவும் ஆனால் அதை திமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

சட்ட மன்ற தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் ஒன்றாக வர வாய்ப்பில்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவே 40 தொகுதியிலும், வெற்றி பெற்று புரட்சி தலைவி ஜெயலலிதா கூறியது போல இந்த இயக்கம் 100 ஆண்டு காலம் தாண்டி வளரும் என்றும் அதிமுகவை யார் நினைத்தாலும் அழிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Comment

Successfully posted