வாக்கு சேகரிப்பின் போது அதிமுக கூட்டணி தொண்டர்களிடம் திமுகவினர் வாக்குவாதம்

Apr 06, 2019 12:50 PM 329

விருத்தாசலம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடம் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, திமுகவை சேர்ந்த வெங்கடேசன், முத்து, கேசவன், ராஜவன்னியன் உள்ளிட்டோர் சாலையில் வாகனத்தை நிறுத்தி, அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொள்ள முடியாமல் இடையூறு ஏற்படுத்தினர். காரை எடுக்குமாறு கூட்டணி கட்சி தொண்டர்கள் கேட்ட போது, தகாத வார்த்தைகளாலும், அதிமுக வேட்பாளரின் சாதி பெயரை கூறி திட்டினர். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்து நிறுத்தி அராஜகத்தில் ஈடுப்பட்ட திமுக கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரியும், வழியில் நின்ற காரை பறிமுதல் செய்யகோரியும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

Comment

Successfully posted