ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களை மீண்டும் வஞ்சித்த திமுக

Sep 18, 2021 02:04 PM 622

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு, தற்போது ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களை மீண்டும் வஞ்சித்துள்ளது.

பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை.

அதற்கு பதிலாக, பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் மட்டும் குறைத்து, டீசல் விலையை குறைக்காமல், வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது குறித்து, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் ஜிஎஸ்டி கூட்டத்தில், தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.

மேலும், ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதற்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டு மக்களை மீண்டும் வஞ்சித்துள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரும் பட்சத்தில், பெட்ரோல் லிட்டருக்கு 75 ரூபாய், டீசல் 68 ரூபாயாகவும் குறையும் என எஸ்பிஐ ரிசர்ச் நிறுவனம் கணித்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டு மக்கள் எப்படி போனால் தங்களுக்கு என்ன? என்பது போல நடந்து கொண்டு, ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதற்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted