ஊராட்சி குழு உறுப்பினர்களை அதிமுகவிற்கு கொடுத்தவர்களுக்கு நன்றி: திமுகவினர் போஸ்டரால் பரபரப்பு

Jan 14, 2020 01:50 PM 718

புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களை அதிமுகவிற்கு தாரைவார்த்த திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி மற்றும் திருமயம் திமுக ஒன்றிய பொறுப்பாளர் சிதம்பரம் ஆகியோருக்கு நன்றி என திமுகவினர் தொகுதி முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டரால் திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வென்றது. குறிப்பாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 22 இடங்களில் திமுக 11 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் மறைமுக வாக்கெடுப்பில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த ஜெயலட்சுமி வெற்றி பெற்றார். இதேபோல் அரிமளம் ஊராட்சி குழு துணைத் தலைவர் பதவியும் அதிமுகவிற்கு சென்றது. இதனால் திமுகவினரிடையே அதிருப்தி நிலவி வந்தது.

இந்நிலையில்,  மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 3 பேரை அதிமுகவிற்கு தாரை வார்த்துக் கொடுத்த திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதிக்கும், திருமயம் தொகுதி திமுக ஒன்றிய கழக பொறுப்பாளர் அழகு என்ற சிதம்பரம் அவர்களுக்கும் நன்றி என தெரிவித்து திமுகவினர் திருமயம் தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளதால் திருமயம் தொகுதியில் பரபரப்பு  நிலவி வருகிறது.

Comment

Successfully posted