உதயநிதிக்காக மின்சாரத்தை திருடிய திமுகவினர்

Jul 03, 2021 10:16 PM 2061

விருத்தாசலத்தில் உதயநிதியை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட மின் விளக்குகளுக்கு, மின் கம்பத்தில் இருந்து திமுகவினர் மின்சாரம் திருடியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னையில் இருந்து கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திற்கு காரில் சென்ற உதயநிதியை வரவேற்கும் விதமாக, விருத்தாசலம் பகுதியில் திமுக சார்பில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

அதிக ஒளியூட்டும் இந்த மின் விளக்குகளுக்கு, திமுகவினர் மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடி பயன்படுத்திய காட்சி சமுக வலைதளங்களில் பரவியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மின் தடையால் மக்கள் அவதியுற்று வரும் சூழலில், உதயநிதியை வரவேற்பதற்காக திமுகவினர் பொறுப்பற்று மின்சாரம் திருடியது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவினரின் மின்சார திருட்டு செயல்களை, மின்வாரிய பணியாளர்கள் கண்டும் காணாதது போல இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Comment

Successfully posted