கோவையில் இருந்து தினமும் டெல்லி, துபாய்க்கு விமான சேவை வலியுறுத்தல் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Feb 13, 2020 03:28 PM 286

கோவையில் இருந்து தினமும் டெல்லி மற்றும் துபாய்க்கு விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்றுள்ள தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்திக் சிங் புரி ஆகியோரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நகர்ப்புற மற்றும் ஊராட்சித்துறைக்கு  வழங்க வேண்டிய ஆறாயிரத்து 374 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியதாக கூறினார். மேலும் கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி மற்றும் துபாய்க்கு தினசரி விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted