இந்தியாவில் 25 ஆயிரமாக குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

Aug 23, 2021 12:28 PM 1243

இந்தியாவில் 160 நாட்களுக்கு பிறகு ஒரு நாள் கொரோனா பாதிப்பு 25 ஆயிரமாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், புதிதாக 25 ஆயிரத்து 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் கேரளாவில் மட்டும் 10 ஆயிரத்து 402 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 24 லட்சத்து 49 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 389 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரத்து 456 ஆக உயர்ந்துள்ளது.

44 ஆயிரத்து 157 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 3 லட்சத்து 33ஆயிரத்து 924 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 58 கோடியே 25 லட்சத்து 49 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Comment

Successfully posted