தமிழகத்தில் 5மாவட்டங்களில் தொடர்ந்து குறையாத தினசரி பாதிப்பு எண்ணிக்கை

Sep 18, 2021 08:09 AM 462

தமிழகத்தில், 5 மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு குறையாமல் காணப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

சென்னையில் கடந்த சில தினங்களாக 200-ஐ கடந்து காணப்பட்ட தினசரி பாதிப்பு எண்ணிக்கை, சற்று குறைந்து 196ஆக பதிவானது.

கோவை, ஈரோடு, தஞ்சை உள்பட 5 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 205 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 132 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 115 பேருக்கும், தஞ்சை மாவட்டத்தில் 110 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comment

Successfully posted