இதனை ரோகித் சர்மாவால் மட்டுமே செய்ய முடியும்: டேவிட் வார்னர்

Dec 02, 2019 05:25 PM 697

 

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் அடிலெய்டு மைதானத்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் முச்சதம் அடித்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 335 ரன்கள் எடுத்திருந்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். இதனால், மேற்கு இந்திய முன்னாள் கேப்டன் பிரையன் லாராவின் சாதனையை கடக்க முடியாமல் போய் விட்டது.

பிரையன் லாரா, 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 400 ரன்கள் சேர்த்ததே, இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனிநபர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது.

image

இந்நிலையில், சேனல் ஒன்றுக்கு டேவிட் வார்னர் பேட்டியளித்து கொண்டிருந்த போது, "இனி வரும் காலங்களில் லாராவின் சாதனையை எந்த வீரர் முறியடிப்பார் என்று கேள்வி எழும்பிய நிலையில், எனது கணிப்புபடி கூற விரும்பினால், இந்திய வீரர் ரோகித் சர்மாவாகத் தான் இருக்க முடியும்" என்று டேவிட் வார்னர் கூறினார்.

தொடர்ந்து பேசிய வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாட என்னை அதிகமாக ஊக்குவித்த நபர் தான் ஷேவாக். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய போது, எனது அருகாமையில் இருந்த ஷேவாக் என்னிடம், " 20 ஓவர் போட்டி வீரரை காட்டிலும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக நீங்கள் உருவெடுப்பீர்கள்" என்று கூறினார்.

Comment

Successfully posted