வைரத்தில் இந்திய வரைபடத்தை செதுக்கிய வியாபாரி

Jan 13, 2020 08:59 PM 584

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 3 கேரட் அளவுள்ள வைரத்தில் இந்திய வரைபடத்தை செதுக்கியுள்ளார்.

சூரத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவர் வைர வியாபாரம் செய்து வருகிறார். பிரதமர் மோடியின் தீவிர ரசிகரான இவர் மோடியின் உருவத்தை புதுமையாக வரைய முடிவு செய்தார்.  3 கேரட்  வைரத்தில் இந்திய வரைபடத்தை செதுக்கிய அவர் அதில் லேசர் கருவியைக் கொண்டு மோடியின் உருவப்படத்தை வரைந்துள்ளார். இந்த வேலையை முடிப்பதற்கு  2மாதங்கள் தினமும்  5 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted