டிச. 16,17 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Dec 13, 2020 01:22 PM 603

வரும் 16, 17 ஆகிய தேதிகளில், தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இம்மாதம் இறுதி வரை வடகிழக்குப் பருவமழை தொடரும் என்பதால், மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலையே நிலவி வந்தாலும், 16 ஆம் தேதிக்கு பிறகு, வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக, கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 16, 17 ஆகிய தேதிகளில், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted