கிருஷ்ணகிரி அணையில் தண்ணீர் திறக்க உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு

Jun 13, 2019 09:54 AM 44

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட உயர்மட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுமார் 9 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டு, முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் வழங்குவது தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. கே.ஆர்.பி அணை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூலை மாதம் ஐந்தாம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Comment

Successfully posted