110 அரசு நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்த பள்ளிக்கல்வித்துறை முடிவு

Mar 02, 2020 08:40 AM 1142

110 அரசு நடுநிலைப் பள்ளிகளை, உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டிய 110 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் நாகராஜ முருகன் தயாரித்து, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ளார். தரம் உயர்த்தப்படவுள்ள பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய அறிக்கையை நாளை மாலைக்குள் சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அறிக்கை கிடைக்கப் பெற்ற உடன், அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, சட்டமன்றத்தில், மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comment

Successfully posted