உலக கோப்பை வில்வித்தை தொடரில் தீபிகா குமாரி ஒரே நாளில் 3 தங்கம் வென்று அசத்தல்

Jun 28, 2021 05:55 PM 2398

 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை வில் வித்தை தொடரில், பெண்களுக்கான ஒற்றையர் ரீகர்வ் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, ரஷ்யாவின் எலினா ஒசிபோவாவை எதிர்கொண்டார். இதில், தீபிகா குமாரி 6க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் எலினா ஒசிபோவாவை வீழ்த்தி தங்கம் வென்றார். முன்னதாக, கலப்பு பிரிவிலும், ரீகர்வ் அணிகள் பிரிவிலும் தீபிகா குமாரி தங்கம் வென்று அசத்தினார். அடுத்த மாதம் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை ஒற்றையர் பிரிவுக்கு தீபிகா குமாரி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comment

Successfully posted