அவதூறு பேச்சு : ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Mar 31, 2021 06:13 AM 493

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா இன்று மாலைக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவுக்கு, அரசியல் கட்சித்தலைவர்கள், பொதுமக்கள், மகளிர் அமைப்பினர் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக சார்பில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரி, காவல்கண்காணிபாளர் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கை, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தநிலையில், ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக பேசிய ஆ.ராசா இன்று மாலை 6 மணிக்குள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted