10 லட்சம் ரூபாய் சன்மானம் - புகைப்படம் வெளியிட்டது தேசிய புலனாய்வு முகமை

Jun 16, 2021 02:09 PM 2679

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் சந்தேகிக்கப்படும் இருவர் தொடர்பான வீடியோவை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 29-ம் தேதி டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழந்த குண்டுவெடிப்பில் காரின் கண்ணாடிகள் நொறுங்கின. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரின் புகைப்படங்களையும், வீடியோவையும் தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த இருவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted