டெல்லியில் தனியார் விடுதியில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உடல் கருகி பலி

Feb 12, 2019 08:53 AM 235

டெல்லியில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் கரோல் பாங்க் பகுதியில் உள்ள ஹோட்டல் அர்பிட் பேலஸ் என்னும் தனியார் விடுதி ஒன்றில் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தனர். இந்நிலையில் அந்த விடுதியில் அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, விடுதியில் தங்கியிருந்த ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்திருப்பதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Comment

Successfully posted