டெல்லி சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்க வாய்ப்பு!!

Jul 10, 2020 09:12 AM 420

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விசாரணை இன்று தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மர்மமான முறையில் இறந்ததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில் காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று வழக்கை சிபிஐக்கு மாற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரவிட்டார். இதையடுத்து, விசாரணையை தொடங்க டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் இன்று தமிழகம் வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த முக்கிய ஆவணங்கள், சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது. அதன்பிறகு, சாத்தான்குளம், கோவில்பட்டி கிளை சிறை ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்குகின்றனர்.

Comment

Successfully posted