ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதரபாத் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றது

Apr 15, 2019 06:39 AM 184

 

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

ஐதராபாத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18 புள்ளி 5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 51 ரன்களும், பேர்ஸ்டோ 41 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் வெற்றி பெறமுடியாத நிலை ஏற்பட்டது.

டெல்லி அணியில் சிறப்பாக பந்து வீசிய ரபடா 4 விக்கெட்டுகளும், கீமோ பால் மற்றும் மோரிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Comment

Successfully posted