ப.சிதம்பரத்தை வருகிற 30-ந் தேதி வரை விசாரிக்கலாம்: நீதிமன்றம்

Oct 25, 2019 11:18 AM 218

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறையினரின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து ப.சிதம்பரம் நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குகர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையில், கேள்விகளுக்கு பதில் அளிக்க சிதம்பரம் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும், அவருடைய காவலை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை வாதிட்டது. இதற்கு சிதம்பரம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமலாக்கத்துறை காவலை வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Comment

Successfully posted