புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் 21 கட்சி தலைவர்கள் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Jan 03, 2019 08:49 PM 138

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி நாளை டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் 21 கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க கோரி நாளை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று நாராயணசாமி அறிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் முறையாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இதில் 21 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.

Comment

Successfully posted