ரேஷன் பொருட்களை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்!!

Jul 06, 2020 08:28 AM 319

ஜூலை மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கிறது.

ஊரடங்கு காரணமாக அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை அரிசி, சர்க்கரை உள்ளிட்ட விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் விநியோகிப்பட்டன. இந்நிலையில் இந்த மாதமும் விலையில்லா அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பொருட்களை வாங்க வர வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய டோக்கன் இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ஊழியர்கள் வழங்க உள்ளனர். இதைப்பயன்படுத்தி10-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் விலையில்லா அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted