மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு!!- நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு!!

Jul 02, 2020 04:04 PM 378

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான நீர்த்திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியிலிருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அணை மின் நிலையத்தில் 28 புள்ளி 2 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையத்தில் 109 புள்ளி 8 மெகா வாட் மின்சாரமும், 7 நீர்தேக்க மின்நிலையங்களிலும் 116 மெகாவாட் என மொத்தம் 258 புள்ளி 5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது நேற்றைய மின் உற்பத்தியை விட 48 புள்ளி 5 மெகாவாட் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted