டெங்கு, பன்றிக் காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்

Nov 17, 2018 11:04 AM 503

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் அனைத்து துறை வளர்ச்சிப்பணிகள் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை முதன்மை செயலாளரும் கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக்குழு தலைவருமான வெங்கடேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார்.

அவரிடம் சுகாதாரப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். கிருஷ்ணகிரியில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, ஒரு சிலர் மட்டுமே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Comment

Successfully posted

Super User

super